Posts

அழகின் ஊர்வலம்

அழகின் ஊர்வலம் -17 வியப்பில் மலர்ந்த காதல் அழகு *** க.அம்சப்ரியா **  உலகின் காட்சிகள் யாவும் அற்புதமும், துயரங்கள் நிறைந்த இடங்களாகவும்தான் காட்சியளிக்கின்றன. எல்லாரும் கண்களால் பார்த்து கடந்துவிடுகின்றனர். அவர்களுக்குத் தாங்கள் பார்த்த காட்சிகள் எதுவும் மனதிலே பதிவதில்லை.  உற்று நோக்குவது திட்டமிட்ட செயல். அதில் வியப்பான காட்சிகள் அகப்படும் சாத்தியக் கூறுகள் குறைவுதான். பார்த்த காட்சி மனதிற்குள் பதிய வேண்டுமானால் அது முன் எப்போதும் இல்லாத உணர்வொன்றை உருவாக்க வேண்டும். அந்தக் காட்சியிலிருந்து மனம் வேறு எங்கும் நகரவிடாமல் ஊசியாகத் துளைக்க வேண்டும். பாதங்கள் எங்கு பயணித்தாலும், மனமோ பார்த்த காட்சியிலேயே நிலைக்க வேண்டும்.     அதற்கு ஒரே தகுதிதான். பார்க்கின்ற காட்சிகளை வியந்து பார்க்கும் கூரழகுப் பார்வை வேண்டும்.     இதோ ஒரு காதலர் ஒரு பெண்ணைப் பார்த்து வியந்து அழகின் பாதையில் பயணிக்கிறார்.  தான் பார்த்த பெண் தெய்வ மங்கையோ? அழகிய மயிலோ? அல்லது மானிடப் பெண்ணோ? எதுவென்று தெரியாமல்  என் நெஞ்சம் மயங்குகின்றதே!   இது மட்டுமா? இந்தக் கண்கள் ...

கவிதைப் பயணம்

அறையை நிறைக்கும் மாயக் கவிதை *** பொள்ளாச்சி வாருங்கள்....தொகுப்பைக் கொண்டாடுவோம் ***   ஒர்  அறையை  வெடித்துக் கிளம்பும் சிரிப்பொலியால்  நிறைத்து  வாழ்வொரு  பூ வனமெனக் கொண்டாடியவர்களின்  அன்பினில்  ஏதோ  ஒரு காலத்தில் கரைந்திருக்கிறேன். எப்போதும் புலம்பல்களால்  தனக்குத் தானே  ஒரு பாடலைப் பாடி வெற்றிடங்களை நிரப்பிக் கொள்கிறவர்களோடும்  இருந்திருக்கிறேன்.        தனித்துச் சமைத்து, தனித்துச் சுவைத்து, தனித்துறங்கி, தனித்தலையும் மனதையும் அறிவேன்.இந்த அறைகளையெல்லாம் கடந்து ஓர் அறையைக் காண வேண்டுமெனில் ....?      ஓர்  அறையின் வாசனைதான் என்ன? ஓர் அறைக்கு கதவுகள் உண்டென்பது போலித்தனமா? அந்த  அறையை எது நிறைத்தபடி  இருக்கிறது? அறையை  தூசும் துரும்பும் அண்டாமல் இடைவிடாமல் ஏன் சுத்தம் செய்து கொண்டே  இருக்கிறார்கள்? வினாக்களால் சூழப்பட்டதுதான் அறை. விடைகள் அற்ற ,விடைகள் அவசியமற்ற அறைகளின் தன்மையை கவிமனம் அறியும்.       கவிஞனை இளங்கவிஞர், வளர்ந்த கவிஞர் என்றெல்லாம் கூறுவ...

க.அம்சப்ரியா விபரங்கள்

சௌமா இலக்கிய விருது க.அம்சப்ரியா **** இயற்பெயர் : க.அம்சகோபால் முருகன். பொள்ளாச்சி அருகே உள்ள பில்சின்னாம்பாளையம் கிராமத்தில் பிறந்தவர்.தற்போது தனியார் பள்ளி ஆசிரியர் . *** இதுவரை வெளிவந்துள்ள நூல்கள்  கவிதை நூல்கள் * சூரியப்பிரசவங்கள் * யாராவது வருகிறார்கள் * உங்களிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை * இரவு காகங்களின் பகல் " என் இரவு ஒரு தேநீர்க் கோப்பையாகிறது " அம்சப்ரியா கவிதைகள் * வழிப்போக்கன் சொல்லாத குறிப்புகள். * தனிமையில் அலையும் தனிமை. * வீடெங்கும் வேப்பம்பூ வாசனை( ஹைக்கூ) கட்டுரை நூல்கள் *** *பறத்தலை விரும்பும் பறவைகள் * காற்றை இழுத்துச் செல்லும் இலைகள் * சொற்களில் ஒளிந்திருக்கும் மௌனம் * வகுப்பறையே  ஒரு வரம்தான் * கல்வி 100 சிந்தனைகள் சிறுநூல் வரிசை **. கவிதைக்குள் அலையும் மனச்சிறகு பூனையின் கடவுளும்..கவிதைப் பறவையும்      பாடத்திட்டம் *** காற்றை இழுத்துச் செல்லும் இலைகள் - கவிதையியல் கட்டுரை நூல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழிலக்கிய மாணவர்களுக்குப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது. மற்றும் பல்வேறு கல்லூரிகளில் கவிதைகள் பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள...

நூல்களைக் கொண்டாடுவோம்

நூல்களைக் கொண்டாடுவோம் -07 ***" நூல் : கண்ணாடி நகரம் ஆசிரியர் ;  ஜெயதேவன் வகை : கவிதை வெளியீடு : அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்      தீநுண்மிக் காலத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தபடியிருக்கும் சமூகத்தின் வளர்ச்சிப் பாதையைச் சற்றே நிதானமாக யோசிக்க வேண்டிய மையப் புள்ளியில் இருக்கிறோம். உலகம் முழுக்க மாற்றங்கள் தொழிற்புரட்சி, பசுமைப் புரட்சியென வேறு வேறு பெயர்களால் ஒவ்வொரு துறையும் வளர்ந்த போதே , நமக்குப் பொருத்தமற்றவைகளும் வரத் துவங்கியதன் விளைவே  இன்று பதற்றமான நிலைக்கு ஆளாக்கியிருக்கிறோம்    நம்மிடமிருந்த செல்வங்கள் ஒவ்வொன்றாகப் பறிபோனதல்லாமல் குப்பைகள் யாவும் ஆச்சரியங்களின் வண்ணத்தாள் சுற்றப்பட்டு நமக்கு வந்து சேர்ந்தன.      ஒவ்வொரு நூற்றாண்டும்  மாற்றங்களின் பெயரால் ,தற்காலிக இன்பங்களாலும் நிரந்தர துன்பங்களாலும் சூழந்த வாழ்வையே எதிர்கொள்கின்றன.உலகம் முழுக்க பருவநிலை மாற்றங்களால் சூழலியல் சீர்கேடுகள் பெருகிவருகின்றன. யார் வாழ்வதற்கான வளர்ச்சி என்றறியாமல் தொடர்ந்து திணிக்கப்பட்ட புதுமைகள் உயிர்குடிக்கும் ஆயுதங்களாகவே மாறிப்போயிற்று. ...
மே மாத கொலுசு மின்னிதழில் வெளியான கட்டுரை- ******************" நன்றி ; மு.அறவொளி அவர்கள் ****** காதலால் கசியும் கவிதையுலகம்... **** க.அம்சப்ரியா ****  காதலினால்  உயிர் தோன்றும் - இங்கு        காதலினால் உயிர் வீரத்திலேறும் காதலினால் அறிவெய்தும் -இங்கு         காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்                         - பாரதியார்        உலகச் சொற்களுக்கெல்லாம் மகுடம் சூட்டும் ஒரு சொல் ஏதென்று வினாவினால்   "காதல் " என்பதன்றி வேறென்ன....? காதலற்ற சொற்களில்  உயிர்ப்பில்லை....காதலற்ற வாழ்வில் கசப்பே எஞ்சி நிற்கும் ...காதலென்பதற்கு  ஆயிரமாயிரம்  விளக்கங்கள் இருக்கலாம் ...காதல் இல்லை என்று சொல்வதற்கு  ஒரு சொல்லும் இல்லை...அவ்வளவு விளக்கங்களும் காதலுக்கு மேலும்  உரமூட்டக் கூடியவைகள்தானே....        காவியங்களின்  உயிர்த்தன்மையே காதலில்தான்  ஒளிந்திருக்கிறது...காதலனுக்கு  காதலியின் பார்வையும் ,சொற்களும் வா...

நூல்களைக் கொண்டாடுவோம்

நூல்களைக் கொண்டாடுவோம் - 06 **** நூல் ; நான்தான் உலகத்தை வரைந்தேன் வகை ; சிறார் கவிதை ஆசிரியர் : மகிழ் ஆதன் வெளியீடு ; வானம் பதிப்பகம் **   மகிழ்ச்சியைப் பரிசளிக்கும் கவிதைகள் ***      எல்லோர்க்குள்ளும் கவித்துவம் நிரம்பி வழிந்தபடி இருக்கிறது.  அது இலக்கியத்தின் வேராக இருக்கிறதென்பதை அறியாமல்  பலரின் கவித்துவம்  யாராலும் ,கவனிக்கப்படாமலும் ,ஊக்கப்படுத்தப்படாமலும்  காற்றில் கலந்துவிடுகிறது. கற்பனை உலகம் பெரு மகிழ்ச்சியானது. நம் விருப்பம் போல மகிழலாம். துயரமாகலாம். விரைவில் ஒன்றிலிருந்து இன்னொன்றாக விடுபடலாம். குறிப்பாக வயதானவர்களிடமும் குழந்தைகளிடமும் இருக்கின்ற இந்த  அளப்பரிய  பேராற்றல்  அலட்சியப்படுத்துவதாக, நிராகரிக்கப் படுவதாக ,கவனிக்கப்படாததாக  யாருக்கும் பயனற்றுப் போகிறது.       யாரேனும் ஒருவரால் முளைத்த செடியொன்று எல்லோர்க்குமானது என்று கண்டறிவதும், முதிர்மரத்தின் பலனை உணர்ந்து  ,கொண்டாடப்படுவதும் அபூர்வமாகவே நிறைவேறுகிறது.      பொய்யிற்கும் ,கற்பனைக்கும் இடையே எந்தவிதமான வேறுபாடு இ...